சென்னை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்துச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊத்தங்கரை தேர்தல் வெற்றி & வழக்கு:
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் இளையராஜா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டி.எம். தமிழ்மீதுவை 5,198 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், இளையராஜாவின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் கீதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
எம்.எல்.ஏ இளையராஜாவின் மனு:
மனுதாரரின் மனுவில் இளையராஜாவின் பெயருக்குப் பதிலாக வேறு ஒருவரின் பெயர் இடம்பெற்றிருந்தது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் சுட்டிக்காட்டப்பட்டன. இதற்கிடையில், அடிப்படை ஆதாரமற்ற தனக்கு எதிரான இந்தத் தேர்தல் வழக்கை முழுமையாக நிராகரிக்க வேண்டும் எனக் கோரி தவெக எம்.எல்.ஏ இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, எம்.எல்.ஏ இளையராஜாவின் மனுவை ஏற்று வாக்காளர் கீதா தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், “தேர்தல் வழக்குகளைப் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருக்க முடியாது; சட்டப்பூர்வ காலக்கெடுவான 6 மாத காலத்திற்குள் தேர்தல் வழக்குகளை முடித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
#TVKMLAIlayaraja #UthangaraiMLA #MadrasHighCourt #ElectionPetitionDismissed #TVKGovernment #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #KrishnagiriNews #TNAssembly #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates