தலைநகருக்கான வாக்குறுதிகளை வெளியிட்டார் ஸ்டாலின்

‘சென்னை சூப்பர் 6’ எனும் சென்னைக்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 19), அண்ணா அறிவாலயத்தில், ‘சென்னை சூப்பர்-6’ எனும் வாக்குறுதிகளை வெளியிட, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.

அதில் சென்னைக்கான மேம்படுத்தப்பட்ட பொதுவசதிகள், சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து, திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள், மனிதாபிமானம் – அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சினைக்கு தீர்வு, உலகளாவிய சிறப்பு மையம், உலகளாவிய திறமைத் தளம் ஆகிய தலைமைப்புகளிலான வாக்குறுதிகளை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், ‘

மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள்:

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.

மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கபடும்.

சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து:

பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.

திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள்:

எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும்.

மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும்.

மழைநீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.

பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும்.

அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029க்குள் அமைக்கப்படும்.

மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சனைக்குத் தீர்வு:

விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.

உலகளாவிய சிறப்பு மையம்:

Al, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologies க்கான சிறப்பு மையம்

ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்

உலகளாவிய திறமைத் தளம் (Global Talent Gateway):

உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு

உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஆராய்ச்சி மையம்

அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள்’ ஆகிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு