தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் தயக்கம் காட்டும் அரசு – இ.சிறிநாத்!

புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள், போதைப்பொருளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என கூறுகின்ற அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கான தயக்கத்தினை காட்டிநிற்பதையே நாங்கள் காண்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி பகுதியில் அமைந்துள்ள வடபத்திரகாளி அம்மாள் ஆலயத்திற்கான கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டிலும் கோயில் பூசகரின் தலைமையிலும் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், இந்து மதகுருமார் மற்றும் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், செங்கலடி பிரதேச சபை மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமூக சேவகரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மோகன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், பொது மக்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆலய பூஜையினைத் தொடர்ந்து சுபமுகூர்த்த வேளையில் இந்து மதகுருமார் மற்றும் அதிதிகள், ஆலய நிர்வாக சபையினர், பொதுமக்கள் ஆகியோரினால் அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பல்வேறு வழிநடத்தல்களுக்குள்ளாகிவரும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இளைஞர்களை எமது சமூக கலாச்சாரங்களை பாதுகாக்கக் கூடியவர்களாக எதிர்காலத்தில் எமது பகுதிகளை கட்டியமைப்பவர்களாக தலைமைத்துவம் உள்ளவர்களாக மாற்றவேண்டிய பொறுப்பு ஆலயங்களுக்குள்ளது.

நாங்கள் எமது பிரதேசத்தில் தமிழ் மக்கள், எமது அரசியல் தலைமைகள் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து எமது சமூகத்தினையும், சமயத்தினையும் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது.

கடந்த ஆண்டு எமக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்படாத போதிலும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியத்தினையும் சமயத்தினையும் வளர்ப்பதற்கு ஆலயங்கள் பங்களிப்பு செய்துவந்துள்ளன. தொடர்ந்து அதனை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை