தமிழீழ விடுதலை புலி ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே மஹிந்த விசாரிக்கப்படுகின்றார்; அவர் கைதானால் அரசு கவிழும் – விமல் வீரவன்ச

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் விடுதலை புலிகள் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார். புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தால் அரசாங்கம் அக்கணமே கவிழும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை அரசாங்கம் 18 சதவீத மின்கட்டண அதிகரிப்பு ஊடாக பொதுக்கள் மீது சுமத்தியுள்ளது. தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நட்டத்தை மீள அறவிடுவதற்கு இதுவரையில் முறையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. போலியான வாக்குறுதிகளை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது.

2.5 மில்;லியன் டொலர் மோசடிக்கு நடந்தது என்னவென்பது தெரியவில்லை. இந்த மோசடி விடயத்தில் அரச அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பாதுகாக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த கால அரசாங்கங்களின் ஊழல் மோசடிகளுக்கு மாத்திரம் அரசாங்கம் முன்னுரிமை வழங்குகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொத்து விவகாரம் பற்றி ஆராய்வதில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் விடுதலை புலிகள் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார். புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தால் அரசாங்கம் அக்கணமே கவிழும்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இந்த மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்குவது முற்றிலும் தவறானது. புலிகள் அமைப்பின் தேவைக்காகவே முப்படைகளின் முன்னாள் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தேசியத்துக்கு எதிராக செயற்பாடுகள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும் என்றார்.

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்