சென்னை:
தமிழகத்தின் 17-வது சட்டமன்ற சபாநாயகராகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுகிறார்.
ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக-வின் எழிலன் நாகநாதனை 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற ஜே.சி.டி. பிரபாகர், கடந்த ஜனவரி மாதம் தவெக-வில் இணைந்தார். பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட இவரைச் சபாநாயகர் பதவிக்கு முதல்வர் விஜய் முன்னிறுத்தியுள்ளார். அதேபோல், துணை சபாநாயகராகத் துறையூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தற்காலிக சபாநாயகர் கருப்பையா நாளை முறைப்படி அறிவிப்பார்.
முன்னாள் அதிமுக பிரமுகரான ஜே.சி.டி. பிரபாகர், தவெக-வின் முக்கியத் தூண்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சபையை நிதானமாகவும், விதிகள் படியும் வழிநடத்தக் கூடிய அனுபவம் இவருக்கு இருப்பதால், இந்த நியமனம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நாளை காலை சபாநாயகராக அவர் பொறுப்பேற்ற பின், 13-ம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் முன்னின்று நடத்துவார்.
#JCDPrabhakar #SpeakerSelection #TNAssenbly #VijayAsCM #TVK #BreakingNews #May11 #TamilNaduPolitics #ThousandLights #DeputySpeaker #Ravishankar #ThalapathyVijay #NewGovernmentTN #UncontestedWin #AssemblySession #PoliticalUpdate #NewEraTN #StalinVsVijay #ElectionResults2026 #VijayMakkalIyakkam_“`