தனியார் வங்கி நிதி மோசடி : 2,619 தடவைகள் நடந்த கொடுக்கல் வாங்கல் வழக்கு

தனியார் வங்கியொன்றின் பொது பேரேட்டுக் கணக்கிலிருந்து (General Ledger) 13 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தரவுகளை உள்ளீடு செய்த அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (30) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த மோசடி தொடர்பாக விளக்கமறியலில் உள்ள லஹிரு ஹர்ஷண, பதும் சங்கல்ப, சாரங்க சேனாதீர உள்ளிட்ட நால்வர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கையில், முதலாவது சந்தேகநபர் 2022 இல் வங்கியின் கடன் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாட்டைப் பயன்படுத்தி இந்த மோசடியை ஆரம்பித்துள்ளார். மோசடி செய்த பணத்தை ‘பைனான்ஸ்’ கணக்குகள் ஊடாக கிரிப்டோகரன்சியாக மாற்றி, மீண்டும் உள்நாட்டுப் பணமாகப் பெறத் திட்டமிட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது சகோதரரான இரண்டாவது சந்தேகநபருடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். மற்றுமொரு நபரின் பெயரில் உள்ள பைனான்ஸ் கணக்கொன்றில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் 14 பேர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் 4 அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, இச்சம்பவத்தில் 2,619 தடவைகள் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் 10 மில்லியன் முதல் 50 மில்லியன் ரூபா வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், 2024 முதல் இவ்வளவு பெரிய மோசடி நடக்கும் வரை வங்கியின் கணக்காய்வுப் பிரிவு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினர். மோசடி குறித்து வங்கியின் கணக்காய்வு அறிக்கைகளில் ஏதேனும் தகவல்கள் வெளிப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இரு தரப்பு விடயங்களையும் பரிசீலித்த நீதிவான், தரவுகளை உள்ளீடு செய்த ஐந்து அதிகாரிகளிடம் உடனடியாக வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன், 2024 ஆம் ஆண்டிலிருந்து வங்கியின் அனைத்து கணக்காய்வு அறிக்கைகளையும் பரிசோதித்து, உயர்மட்ட அதிகாரிகளுக்கு இது தெரிந்திருந்ததா ? என விசாரணை செய்யுமாறும், ஒவ்வொரு மாதமும் பணம் எவ்வாறு வங்கியிலிருந்து வெளியேறியது என்பது குறித்த முழுமையான அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையில் சமர்ப்பிக்குமாறும் வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

CXM5FMXRZJBINANOWRLZJRBOUI (1)

செயின்ட் ஜானில் இரண்டு சிறுவர்களைக் குத்திக் கொன்ற வழக்கில் நபர் குற்றவாளி எனத் தீர்ப்பு!

June 24, 2026

செயின்ட் ஜான் (Saint John, N.B.): கடந்த ஆண்டு நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் செயின்ட் ஜான் நகரில் இரண்டு சிறுவர்கள்

62YK4YSVLJEMLBM3BFPBKIL7ME

பேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் மோசடி: போலிப் பணத்தைக் கொடுத்து ஏமாற்றிய ஹாமில்டன் நகர சிறுவர்கள் இருவர் கைது!

June 24, 2026

ஹாமில்டன் (Hamilton): பேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் (Facebook Marketplace) இணையத்தளம் ஊடாகப் பொருட்களை விற்பனை செய்த பலரிடம், பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள

730511042_3065084723680884_6958274398119403866_n

ஒஷாவா காப்பக ஊழியர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: 13 வயதுச் சிறுவன் பாதிக்கப்பட்டதாகப் போலீஸ் தகவல்!

June 24, 2026

ஒஷாவா (Oshawa) பகுதியில் உள்ள குழுமக் காப்பகம் (Group Home) ஒன்றின் பெண் ஊழியர் ஒருவர், அங்கு தங்கியிருந்த 13

2ZBCI3FDQZH5PG3FA5LV6F5P4U

மொன்றியால் துப்பாக்கிச்சூடு: பெண்களுக்கும் சமூகத்திற்கும் எதிரான வன்மத்தைக் கக்கிய துப்பாக்கிதாரியின் ‘இன்செல்’ (Incel) கொள்கை அறிக்கை!

June 24, 2026

கனடாவின் மொன்றியால் நகரில் கடந்த திங்கள்கிழமை ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் துப்பாக்கிதாரி உட்பட மூன்று பேர்

ZXJMY2D5IZFKZMKW2SCMALWYUQ

வாட்டர்லூவில் பாலியல் அத்துமீறல் மற்றும் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

வில்ஃப்ரிட் லாரியர் பல்கலைக்கழகத்திற்கு (Wilfrid Laurier University) அருகில் நடந்த தொடர்ச்சியான அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் குறித்து வாட்டர்லூ பிராந்திய காவல்துறை

MediaFile_20260624_203425_345

தெல்தெனிய பெண் உடற்பயிற்சி நிபுணர் கொலை வழக்கு: கழுத்து நெரிக்கப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி; பிரதான சந்தேக நபரும் மனைவியும் சாவகச்சேரியில் கைது!

June 24, 2026

தெல்தெனிய பகுதியில் வாகனமொன்றினுள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் உடற்பயிற்சி நிபுணரின் (Physiotherapist) மரணம், கழுத்து நெரிக்கப்பட்டமையினாலேயே (Strangulation) சம்பவித்துள்ளது என்பது

namal

வடக்கு ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் – நாமல்

June 24, 2026

வவுனியா மாநகரசபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி. கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து

removed

வவுனியா மேயர் காண்டீபன், சாவகச்சேரி உப தவிசாளர் கிசோர் ஆகியோர் பதவி நீக்கம்

June 24, 2026

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக

KKS CEMENT

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் தீ விபத்து: இராணுவ உடைமைகள் சேதம்

June 24, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை வெட்டி அகற்றும் செயலில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால்

wimal

விமல் வீரவன்சவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாகன மோசடி வழக்கில் மீண்டும் விளக்கமறியலில்

June 24, 2026

அரசாங்கப் பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் (State Engineering Corporation) சொந்தமான வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்து, அதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை

Easter Attacks 1-844647

சஹரான் குழுவின் ஆன்மீகத் தலைவர் நெளபர் மௌலவியின் வாக்குமூலம் தன்னிச்சையானது என நீதிமன்றம் தீர்ப்பு

June 24, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கில், முதலாவது குற்றவாளியான சஹரானுடன் தொடர்புடைய

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு

June 24, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள்