டொராண்டோ மாநகரில் 3 மில்லியன் டொலர்களுக்கும் அதிக மதிப்புள்ள சொகுசு வீடுகளை வாங்குபவர்களுக்கான, நிலப்பரிமாற்ற வரியை (Land Transfer Tax) உயர்த்துவதற்கு டொராண்டோ மாநகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.
மாநகர சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 17-க்கு 7 என்ற விகிதத்தில், இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றது.
இதன் மூலம் நகரின் பெரும் பணக்காரர்களிடமிருந்து கூடுதல் நிதியைத் திரட்டி, சாதாரண மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) திட்டமிட்டுள்ளார்.
இந்த புதிய வரி உயர்வு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.