ஒன்லைன் டேட்டிங் செயலிகள் (Online dating apps) மூலம் பலரை ஏமாற்றிய குற்றத்திற்காக ஏற்கனவே தண்டனை பெற்ற நபர் ஒருவரை பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சாணிச் (Saanich) பொலிஸ் திணைக்களத்தின் தகவல்படி, புரோடி ப்ரூக்ஸ் (Brodie Brooks) என்ற அந்த நபர், “அமைதியைப் பேணவும் நன்னடத்தையுடன் இருக்கவும்” என்ற நீதிமன்றக் கட்டளை உள்ளிட்ட பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காகத் தற்போது தேடப்பட்டு வருகிறார்.
விக்டோரியா பிராந்தியத்தைச் சுற்றி வசிக்கும் சுமார் 12-க்கும் மேற்பட்டவர்களிடம் (அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்) 90,000 டாலருக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக ப்ரூக்ஸ் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார். அவர் இணையம் வழியாகப் பெண்களுடன் உறவை ஏற்படுத்தி, பின்னர் திருப்பித் தருவதாகக் கூறிப் பணம் கடன் வாங்குவதையும், அவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்கும்போது தொடர்பைத் துண்டிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
அவரை “மிகவும் தந்திரமானவர் மற்றும் ஏமாற்றும் குணம் கொண்டவர்” என்று விவரித்துள்ள பொலிஸார், இணையம் வழியாக அறிமுகமாகும் நபர்களுக்குப் பணம் அனுப்பும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அவர் இருக்குமிடம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்