ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கடந்த ஆட்சியாளர்களை போன்றே செயற்படுகிறார்

அரசியலமைப்பின் சிவில் பிரஜைகளின் பதவி காலம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதியுடன் முடிவடைந்ததன் பின்னர் கணக்காய்வாளர் நாயகத்துக்கான நியமனம் வழங்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கடந்த ஆட்சியாளர்களை போன்றே செயற்படுகிறார் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுகள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. வழங்கிய எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. ஆளும் தரப்பின் உறுப்பினர்களும் பைத்தியம் போன்று செயற்படுகிறார்கள்.

தனது பல்கலைக்கழக நண்பனை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கணக்காய்வாளர் நாயகம் பதவியை வெற்றிடமாக்கியுள்ளார்.

உயர் பதவிகளுக்கான அனுமதி வழங்கும் அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் பிரஜைகள் சிறந்தவர்கள் அவர்கள் அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் செயற்பட்டார்கள். ஜனாதிபதியின் பரிந்துரைகள் தவறாயின் அதனை தற்றுணிபுடன் இவர்கள் எதிர்த்தார்கள்.

கணக்காய்வாளர் நாயகமாக தனது பல்கலைக்கழக நண்பனை நியமிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவையின் சிவில் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.இதனைத் தொடர்ந்து அந்த முன்மொழிவு இரத்துச் செய்யப்பட்டது.

அரசியலமைப்பின் சிவில் பிரஜைகளின் பதவி காலம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதியுடன் முடிவடைந்ததன் பின்னர் கணக்காய்வாளர் நாயகத்துக்கான நியமனம் வழங்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கடந்த ஆட்சியாளர்களை போன்றே செயற்படுகிறார்.

அரசியலமைப்பு பேரவையின் சிவில் உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைந்ததன் பின்னர் அரசாங்கத்துக்கு சார்பானவர்கள் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.அதன் பின்னர் ஜனாதிபதி தனது நோக்கத்தை நிறைவேற்றுக் கொள்வார் என்றார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்