ஜனநாயகம் என்பது விளையாட்டு அல்ல, அது கடின உழைப்பு – பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்திய அரசு சார்பில் இலங்கை அரசுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் இலங்கை மக்களுக்காக இந்திய அரசு உணவு, நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்து பலமுறை உதவிக்கரம் நீட்டியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் நிதி உதவியை பிரதமர் ஹரிணி அமரசூரிய நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஹரிணி அமரசூரிய, 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு இன்று சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக புதுதில்லி பல்கலைக்கழகத்திற்கு சென்று, அங்குள்ள மாணவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

ஹரிணி அமரசூரிய புதுதில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். கடந்த 1991 முதல் 1994 வரை புதுதில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை சோஷியாலஜி படித்து பட்டம் பெற்றுள்ளார். தற்போது பிரதமராக பதவியேற்று, தங்கள் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தரும் முன்னாள் மாணவி பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்க மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக காத்திருந்தனர். அவரை வரவேற்கும் விதமாக பெரிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்திற்கு வருகை தந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவை, பல்கலைக்கழக வேந்தர் அஞ்சு ஸ்ரீவஸ்தவா வரவேற்றார். அதைத் தொடர்ந்து மாணவர்களின் உற்சாக வரவேற்பை ஹரிணி ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் ஹரிணி அமரசூரிய உரையாடினார். அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மாணவர்களிடம் பேசியபோது, “கல்வியும், கருணையும் ஒன்றாக கைகோர்த்துச் செல்ல வேண்டும். கருணை இல்லாமல் அறிவு முழுமையடையாது” என்றார். மேலும், “ஜனநாயகம் என்பது விளையாட்டு அல்ல, அது கடின உழைப்பு” என்று குறிப்பிட்ட அவர், “வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது நாடுகளுக்கு இடையிலோ தடைகளை உருவாக்க வேண்டாம், பாலங்களை உருவாக்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா அளித்த நிதி உதவி குறித்து பேசிய அவர், “இருள் சூழ்ந்த நேரத்தில் உண்மையான நண்பனைப் போல் இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை