ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை ?

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை தர இருக்கிறாராம். அதைப்போல பராசக்தி விழாவிற்கு வருகை தரப்போகும் சிறப்பு விருந்தினர் யார் என்பது குறித்தும் பேச்சுக்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது

விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய செய்திகள் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. விஜய்யின் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழகத்தில் இல்லாமல் மலேசியாவில் தான் நடைபெற இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

டிசம்பர் 27 இவ்விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளதாம். இதற்கான வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்க தற்போது ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளப்போவது யார் ? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்தியாவில் சாலை முடியும் இடம் எது தெரியுமா? ராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட அதிசயம்!
தற்போது கிடைத்த தகவலின்படி பலரும் தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர். ஹெச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ தனுஷ் தான். எனவே அதன் அடிப்படையில் தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர். ஆனால் இது உண்மையான தகவலா ? இல்லையா ? என்பது தெரியவில்லை.

இந்த தகவல் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஜனநாயகன்படத்தோடு பொங்கலுக்கு வெளியாகப்போகும் பராசக்தி இசை வெளியீட்டு விழா பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற இருப்பதாக தெரிகின்றது. ஜனவரி முதல் வாரத்தில் பராசக்தி இசை வெளியீட்டு விழா நடைபெறுமாம்.

இந்நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் சிறப்பு விருந்தினராக வந்தால் பராசக்தி விழாவிற்கு யார் சிறப்பு விருந்தினராக வருவார் ? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பராசக்தி திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வாங்கி வெளியிடுகின்றது. படத்தை அவர்கள் தான் ப்ரோமோஷனும் செய்வார்கள் என தெரிகின்றது.

கமல்ஹாசன்ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் நெருக்கமாக இருப்பதால் அவர் பராசக்தி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருவாரா ? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதெல்லாம் வெறும் யுகங்கள் தானே தவிர உண்மையான தகவலாக தெரியவில்லை. படக்குழுவோ படம் தொடர்புடையவர்களோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இத்தகவல்கள் உறுதியான தகவல்களா ? என்பது தெரியாது.

இந்நிலையில் பராசக்தி மற்றும் ஜனநாயகன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் டைம் இருக்கின்றது. அதற்குள் கோலிவுட் வட்டத்தில் இவ்விரு படங்கள் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சோஷியல் மீடியாவில் ஜனநாயகன் vs பராசக்தி மோதல்கள் தான் போய்க்கொண்டு இருக்கின்றது.

அதுவும் இது விஜய்யின் கடைசி படம் என்பதாலும், பராசக்தி திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறார்கள் என்பதாலும் இதை அரசியல் ரீதியாகவும் சிலர் பார்க்கின்றனர். எது எப்படியோ நாளுக்கு நாள் ஜனநாயகன் vs பராசக்திபடங்களை பற்றிய பேச்சுக்கள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. கண்டிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவும் என்றே தெரிகின்றது.

Gnanasara-Thera

ஜனாதிபதி எனக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் – ஞானசார தேரர் வேண்டுகோள்

September 21, 2026

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை கொழும்பில்

sajith 5

மக்களின் பலத்தின் மூலம் 22வது திருத்தத்தை தோற்கடிக்கவேண்டும் – சஜித்

September 21, 2026

அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக பொதுமக்கள் அணிதிரளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு மூன்றில்

parliment

உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டது

September 21, 2026

அரசியலமைப்பின் 22வது திருத்தம் குறித்த தனது தீர்மானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளது என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்மானத்தை

sajith anojan

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்தார் சஜித்

September 21, 2026

எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் குடும்பத்தினரை இன்றுசந்தித்து உரையாடியுள்ளார் கொழும்பில் எதிர்கட்சி தலைவரின்

cen

திரைப்​படத் தணிக்கை விதிகளில் மாற்​றம்

September 21, 2026

த்​திய தகவல் மற்​றும் ஒளிபரப்பு அமைச்​சகம், மத்​திய திரைப்பட தணிக்கை வாரி​யத்​துக்​கான புதிய திருத்​தப்​பட்ட வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்​டுள்​ளது. இந்த வழி​காட்​டு​தல்​களை

11

முதல்வர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

September 21, 2026

நடு​வுல கொஞ்​சம் பக்​கத்த காணோம், ‘சீதக்​கா​தி’ படங்​களை இயக்​கிய பாலாஜி தரணிதரன், அடுத்து இயக்கி இருக்​கும் படம் ‘பத்​தா’. விஜய்

ra

ராஷ்மிகாவின் ‘மைசா’ டீசர் வெளியீடு

September 21, 2026

ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரவீந்திரா புல்லே இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ்

667dd350-b4d2-11f1-b55d-81b847f392df.png

மொஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்: நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக மேயர் தெரிவிப்பு

September 21, 2026

மொஸ்கோ பிராந்தியத்தை இலக்கு வைத்து உக்ரைன் தனது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதில் நகரின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு

20867fcd741b7ded3715f325c3c4c5bd17889223173851319_original

“மதுராந்தகத்தில் கொதிக்கும் கிராமங்கள்!” – வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

September 21, 2026

செங்கல்பட்டு: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) தொகுதியில் அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,

6096cdd0-373b-11f1-b3bd-89f011397f28.jpg

“மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று முதல் சீமான் சூறாவளிப் பிரசாரம்!” – நாம் தமிழர் கட்சியின் 9 நாள் பிரசாரப் பயணத் திட்டம் வெளியீடு

September 21, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் நாம்

Screenshot-2026-09-20-165758

“விஜய் லண்டனில் அஜித்தைச் சந்தித்ததில் எந்தத் தவறுமில்லை; தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தேவை!” – நடிகர் பிரகாஷ்ராஜ்

September 21, 2026

சென்னை: தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து

TVK-Rajmohan-2025-05-439d058ec97e01d8575aae7ecd9ea3c2

“கூட்டணிக் கட்சிகளிடம் திமுக பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது!” – அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

September 21, 2026

திருநெல்வேலி: திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் தவெக ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும்