யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 51ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன.
இதன்போது, நான்கு சிறார்களின் என்புக்கூடுகள் உள்ளிட்ட 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், புதிதாக 8 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 552 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 540 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த அகழ்வுப் பணிகளில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் காவல்துறையினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.