சீனாவில் ரூ.50,000 கோடி மோசடி; குற்றவாளி லண்டனில் தலைமறைவு

சீனாவில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிவிட்டு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணி, விரைவில் தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார்.

கடந்த 2021ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்க முயன்றார்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், அவ்வளவு பெரிய தொகையை லண்டனில் முதலீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவில்லை.

இதையடுத்து, லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத் அருகே, மாதம் 18 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து அவர் வசித்த ஆடம்பர மாளிகையில் போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு விலையுயர்ந்த ஆடைகள், பொருட்கள், 60,000-க்கும் மேற்பட்ட பிட்காயின் தொடர்பான தகவல்கள் கொண்ட ஹார்ட் டிரைவ்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பிட்காயின்களின் மதிப்பு 50,000 கோடி ரூபாய்க்கும் மேலாகும்.

மேலும், ஸ்வீடனில் கோட்டை வாங்க வேண்டும், லிபர்லாந்து ராணியாக வேண்டும் என்று எழுதி வைத்திருந்த டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

யாடி ஷாங் என்ற பெயரில் இருந்த அந்தப் பெண்ணிடம் துருவி துருவி விசாரணை நடத்தியபோது, சீனாவைச் சேர்ந்த ஷிமின் கியான், 47, என்பது தெரியவந்தது. அவர் சீனாவில் இருந்து தப்பி லண்டனுக்கு வந்த தலைமறைவு குற்றவாளி என்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

சீனாவில், ‘லான்டியன் கெருய்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ஷிமின் கியான், முதியோர், ஓய்வூதியதாரர்களை குறிவைத்து கிரிப்டோ கரன்சி மோசடியை அரங்கேற்றியுள்ளார். ‘படுத்துக் கொண்டிருக்கும்போதே பணக்காரர் ஆகுங்கள்’ என்று ஆசையை துாண்டி ஒரு லட்சம் பேருக்கு மேல் முதலீடு செய்ய வைத்துள்ளார்.

கடந்த, 2017-ல் திட்டம் சரிய ஆரம்பித்ததும், சீன அதிகாரிகள் விசாரணை துவங்கினர். பின்னர் போலி பாஸ்போர்ட் மூலம் நாட்டை விட்டு தப்பியோடி, லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். கடந்த, 2023ல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஷிமின் கியானுக்கு, இந்த வாரம் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றம் தண்டனை வழங்க உள்ளது.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்