சென்னை:
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் காரணமாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து கூண்டோடு விலக முடிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.வி.சண்முகம் தரப்பினருக்கும், மாவட்ட செயலாளர் பசுபதி தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்ததை அடுத்து, சி.வி.சண்முகத்தின் முக்கிய ஆதரவாளர்கள் 11 பேர் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் கொதிப்படைந்த மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது விலகல் கடிதங்களுடன் கார்கள் மற்றும் பேருந்துகளில் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். அவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடிதம் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியானதால், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் விழுப்புரம் மாவட்ட அதிமுக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
#CVShanmugam #AIADMK #Villupuram #PartyRevolt #EdappadiPalaniswami #InternalConflict #MassResignation #PoliticalCrisis #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #HeadquartersSecurity #TamilNaduPolitics #StatePolitics #PartySplit #Governance #CurrentAffairs #PoliticalNews #OppositionTension