சிலம்பரசன் தற்சமயம் தனது 49 ஆவது திரைப்படமான அரசன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தற்போது கோவில்பட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
இதனைத்தொடர்ந்து சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் தான் நடிக்கப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. அப்படத்தை தொடர்ந்து சிம்பு முன்னணி இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக வந்த தகவல் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களை வைத்து பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தான் சிம்பு ஒரு படத்தில் நடிக்கப்போறாராம். இந்த தகவல் ஒரு சில மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இக்கூட்டணி பற்றி பரபரப்பாகி பேசப்பட்டு வருகின்றது.