சிகரெட் உற்பத்தி 32 சதவீதத்தால் வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புகையிலைப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரித் திருத்தங்களின் தாக்கம் காரணமாக, 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் சிகரெட் தயாரிப்பு 32 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர இன்று (20) சபை அமர்வில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டில் 2.8 பில்லியனாக இருந்த சிகரெட் உற்பத்தி, வரி கொள்கைகளின் தாக்கம் காரணமாக 2025 ஆம் ஆண்டளவில் 1.9 பில்லியனாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் வருமானத்தை ஈட்டுவதைத் தவிர, புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார சேவைகள் செலவுகள் மற்றும் பிற சமூக – பொரு பொருளாதார எதிர்மறைக் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதே இந்தக் கொள்கையின் பிரதான நோக்கம் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை 4 தடவைகள் உற்பத்தி வரிகள், பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் நிறுவன வருமான வரி திருத்தப்பட்டுள்ளன.

2023 ஜனவரி 01 மற்றும் ஜூலை 01 ஆகிய திகதிகளில் முறையே 20 வீதம் உற்பத்தி வரிகள் அதிகரிக்கப்பட்டன.

2024 ஜனவரி 01 அன்று பணவீக்கச் சுட்டெண் பொறிமுறையின் கீழ் 14 வீதத்தால் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டது.

2025 ஜனவரி 11 அன்று 5.9 வீதத்தால் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டது.

2024 ஜனவரி 01 அன்று பெறுமதி சேர் வரி (VAT) 15 வீதத்திலிருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டது.

2025 ஏப்ரல் 01 அன்று நிறுவன வருமான வரி 40 வீதத்திலிருந்து 45 வீதமாக உயர்த்தப்பட்டது.

புகையிலை மீது அறவிடப்படும் வரித் தொகை (2025 ஜனவரி 11 முதல்):

72 – 84 மில்லிமீற்றர் வரை: 109.95 ரூபா.

67 – 72 மில்லிமீற்றர் வரை: 95.88 ரூபா.

60 – 67 மில்லிமீற்றர் வரை: 69.15 ரூபா.

60 மில்லிமீற்றரைத் தாண்டாதவை: 26.59 ரூபா.

வரிகள் உயர்த்தப்பட்டதன் ஊடாக நேரடி மற்றும் மறைமுக வரி வருமானங்கள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இது மக்கள் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் வருமான முகாமைத்துவத்திற்கும் பங்களித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்