சாட்டி இந்து மயானத்தில் நவீன எரிவாயு தகனசாலை!

மின்சாரம் அல்லது எரிவாயு தகன மேடை ஒன்றை வேலணை சாட்டி இந்து மயானத்தில் அமைக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதி சபை அமர்வு நேற்று (26) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எமது மக்களின் இறுதி பயணத்தின் இறுதி இடமாக இருபது மயானங்கள் தான். அதனால் மயானங்களின் மேம்பாடும் காலத்துக்கேற்ற வகையில் மாறுபடல் அல்லது புதியதையும் உள்வாங்கல் அவசியமாகின்றது.

இதேநேரம் பாரம்பரிய மயானங்களில் விறகு தகன மேடைகள் இருப்பதால் அதிகளவு மரங்கள் அழிக்கப்பட்டு இன்று பூவரச மரங்கள் கூட அற்றுவரும் நிலை காணப்படுகின்றது.

அதேவேளை இந்த எரிவாயு தகன மேடை வெப்பநிலை மற்றும் எரிபொருள் பயன்பாட்டில் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால், தகனம் சீரானதாகவும், முழுமையாகவும், திறன்மிக்கதாகவும் நடைபெறுகிறது.

விரைவாகவும் விறகுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதால், மரங்கள் வெட்டப்படுவது குறைக்கப்படுகிறது, அதுவும் மரங்கள் பாதுகாப்புகுக்கு உந்துதலாக இருக்கின்றது.இது வனப்பாதுகாப்புக்கு உதவுகிறது.

அதுமட்டுமல்லாது இவை விறகு எரிப்பதில் ஏற்படும் அதிகப்படியான புகை, கார்பன் மோனாக்சைடு (CO), மற்றும் திடமான துகள்கள் போன்றவற்றையும் குறைக்கின்றது.இதனால் காற்றின் தரமும் மேம்படுகின்றது.

முழுமையான தகனம் மூலம் சுகாதாரம் சார் நோய்க்கிருமிகள் பரவும் அபாயத்தையும் குறைக்கப்படுகிறது. எனவே சபையூடாகவோ அல்லது விசேட நிதியூடாகவோ இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வத்த நிலையில் பூவரச மரங்கள் அழிவடைவத தடுக்க வேண்டும் என்றும், அதை அருகிவிடாது பூவரச மரங்களை நாட்டி அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியதுடன் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்படுவதுடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத அனுமதி வழங்கியிருந்தது.

மேலும், தவிசாளர் நிதி மூலங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்