சென்னை: தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. இன்றைய கூட்டத்தின் முக்கிய நிகழ்வாகச் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முன்மொழியப்பட்ட ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரைச் சபாநாயகர் இருக்கைக்கு அவை முன்னவர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முறைப்படி இரு கைகளையும் பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தனர். பின்னர் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சபாநாயகரைப் பாராட்டி உரையாற்றினார். ஜே.சி.டி. பிரபாகரின் நீண்டகால அரசியல் அனுபவம் அவையை நடுநிலையோடு வழிநடத்த உதவும் எனத் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் புதிய சபாநாயகருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சபாநாயகர் தேர்வு தடையின்றி முடிந்ததைத் தொடர்ந்து, நாளை (மே 13) தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சட்டசபை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
#JCDPrabhakar #SpeakerElection #TNAssenbly #VijayAsCM #TVK #BreakingNews #May12 #TamilNaduPolitics #FortStGeorge #DeputySpeaker #Ravishankar #ThalapathyVijay #NewGovernmentTN #AssemblyUpdates #UdhayanidhiStalin #Sengottaiyan #DemocraticTradition #NewEraTN #TamilNews #VijayMakkalIyakkam_“`