சந்திரசேகர் கூட்டி வந்த அடியாட்களால் கஜேந்திரனுக்கு அச்சுறுத்தல் என்ன நடந்தது?

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சலிட்டு கூட்டத்தைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற குழப்பம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார்.
மேலும் தெரிவித்தவை வருமாறு,
தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு தரமுயர்த்துவது தொடர்பான விவகாரத்திலும், தையிட்டி விகாரை காணி விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கருத்துக்களை முன்வைத்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குழப்பமடைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை உரையாட விடாமல் தடுத்து தொடர்ச்சியாக குழப்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசினுடைய தேவையை நிறைவு செய்வதற்காகவே அர்ச்சுனா இராமநாதனை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பயன்படுத்திக் கொண்டார்.
எனினும் அந்த விடயங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதியாக நின்று மக்களுடைய காணிகளைச் சுவீகரிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்த போது, பொதுமக்கள் அரங்கில் இருந்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எழுந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எதிராகக் கூச்சலிடத் தொடங்கினார்கள். அவர்கள் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள்.
கிராமங்களிலே அடிதடி, வன்முறைகளில் ஈடுபடுகின்ற நபர்களே காடைத்தனமாகக் கூக்குரலிடுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். குறிப்பாக வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையினுடைய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எவ்வாறு அந்தக் கூட்டத்துக்கு வந்தார் என்பது தெரியாது.
அவர் அமைச்சர் சந்திரசேகருடைய அடியாளாகவே கலந்துகொண்டிருந்தார்.
அவர் அங்கு கருத்துச் சொல்கின்றவர்களைக் காணொளி எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ஊடகவியலாளர்களை வீடியோ எடுத்து அச்சுறுத்தினார். தங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி நின்ற அப்பாவிப் பொதுமக்களை வீடியோ எடுத்து அச்சுறுத்தியிருந்தார்.
அது மட்டும் அல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய பிரதிநிதியாக நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துச் சொல்ல முற்பட்டபோது எனக்கு முன்னால் வந்து நின்று என்னை சபை நடவடிக்கைகளைப் பார்க்க விடாமல் தடுத்துக் கொண்டு என்னைக் காணொளி எடுத்து அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதில்லை. மக்கள் மத்தியில் எங்களுடைய கருத்துக்கள் செல்வது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு அச்சப்படுகின்றது.
தங்களுடைய இனவாத முகம் அம்பலப்படுவதை தடுக்கக் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதற்கும், ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கும், அங்கே வருகின்ற மக்களைத் தமது பிரச்சினைகளைக் கூறவிடாமல் அச்சுறுத்துகின்ற செயற்பாடுகளைச் சந்திரசேகர் தலைமையிலான இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். – என்றார்.

Screenshot_20260624_132345_Editor-Lite

இலங்கையின் கனிம வளங்களால் பயன்பெறுவது யார்? நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

June 24, 2026

அரசாங்கத்தின் தேசிய கனிமக் கொள்கை (National Mineral Policy) மற்றும் கனிம அகழ்வாராய்ச்சி, சுரங்க அகழ்வுக்கான உரிமங்கள் (Licences) வழங்கப்படுவது

suresh11

சலே நடமாடுகிறார், அவராகவே ஆடை அணிகிறார்: அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்

June 24, 2026

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, மோசமாக

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

June 24, 2026

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

myan

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

June 24, 2026

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

729481106_1021088533701986_4482724275745954913_n

விட்பி கடையில் கள்ள நோட்டுகள் புழக்கம்: சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

கனடாவின் விட்பி (Whitby) நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய சந்தேக

730515905_1623541362526678_1589963721921684927_n

ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

June 24, 2026

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம்

Rajitha

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா

June 24, 2026

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின்

730451457_856458137519480_6962660640323909533_n

மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

June 24, 2026

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக்

727788199_1687261052550087_6943194283308762826_n

பியர்சன் தங்கக் கொள்ளை விவகாரம்: துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் பிராம்ப்டன் நபருக்கு அமெரிக்காவில் 13 ஆண்டுகள் சிறை

June 24, 2026

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட

mull

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு; முல்லைத்தீவில் சம்பவம்

June 24, 2026

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக

strike

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் போராட்டம்?

June 24, 2026

வேலையற்ற பட்டதாரிகள் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்