அனுராதபுரம் ரூவன்வெலி சாயவுக்கு முன்பாகச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குமார்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் சியபத் பசிந்து விக்ரமரத்ன இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கடந்த 7ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை ரத்து செய்யுமாறு பலாங்கொடை கஸ்ஸப தேரர் சார்பில் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.