தற்போதைய நிலவரப்படி தவெக 104, அதிமுக 77, திமுக 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக: 104, அதிமுக: 77, திமுக: 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை நிலவரப்படி அதிமுக 2-ம் இடத்திலும், திமுக 3-ம் இடத்திலும் இருக்கின்றன.
சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலை. தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு.
முன்னிலை நிலவரம் @ தமிழகம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக: 104, அதிமுக: 77, திமுக: 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
புதுச்சேரி முன்னிலை நிலவரம்: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 30 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி: 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி: 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேற்கு வங்க முன்னிலை நிலவரம்: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ்: 107, பாஜக: 145, காங்கிரஸ்: 3, இடதுசாரிகள்: 2 என முன்னிலை வகிக்கின்றன.
கேரளா முன்னிலை நிலவரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆளும் எல்டிஎஃப் கூட்டணி: 51, யுடிஎஃப் கூட்டணி: 84, என்டிஏ கூட்டணி: 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
அசாம் முன்னிலை நிலவரம்: அசாம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக: 94 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: 30, பிற கட்சிகள்: 1 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.