ஹோமாகம – மொரகஹஹேன வீதியில் அமைந்துள்ள விடுதியில், தனியார் பல்கலைக்கழக மாணவர் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் வெல்லவாவை சேர்ந்த 19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு அந்த விடுதியில் இரு மாணவர் குழுக்களும் விருந்து நடத்தியிருந்தன.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தக் கொலை நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.