குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உட்பட்ட அதிகாரிகளை கைது செய்ய இடைக்காலத் தடை

பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜனக் நந்தன உள்ளிட்ட நான்கு அதிகாரிகளைக் கைது செய்வதைத் தடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் பணியாற்றிய குறித்த அதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பில் தாம் எந்நேரமும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் வழிகாட்டலின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும், அதன் மூலம் தமக்கு கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனடிப்படையில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும், இந்த விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடமிருந்து நீக்குமாறும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்ததுடன், குறித்த வழக்கை மீண்டும் மே மாதம் 15 ஆம் திகதி அழைப்பதற்கும் உத்தரவிட்டது.

இதற்கு மேலதிகமாக, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் (Notice) வழங்குமாறும் நீதியரசர் உத்தரவிட்டார்.

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”