ஆடி அமாவாசையை முன்னிட்டு பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் யாழ்ப்பாணம் – கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் இன்று புதன்கிழமை நடைபெற்றன.
தந்தையை இழந்தவர்கள் உள்ளிட்டோர் பிதிர்க்கடன் செலுத்தி, கடலில் நீராடி ஆடி அமாவாசை விரதத்தை நிறைவேற்றினர்.
இதேவேளை, மாவிட்டபுரம் கந்தசுவாமி மற்றும் கீரிமலை நகுலேஸ்வர தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்தக்கரையில் இடம்பெற்றது.