விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அச்சுதன், மாவட்ட அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர்,பிரதம பொறியியலாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்,வட மாகாண விளையாட்டு அரங்க பொறுப்பதிகாரி,விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண விளையாட்டு அரங்கின் நிலைமைகளை ஆராய்ந்தனர்.
விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அச்சுதன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
இவ் விஜயத்தின் போது மாவட்ட அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், பிரதம பொறியியலாளர்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்,வட மாகாண விளையாட்டு அரங்க பொறுப்பதிகாரி,விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன்
வட மாகாண உள்ளக மற்றும் வெளியக விளையாட்டு அரங்குகளின் நிலமைகளை பார்வையிட்டிருந்தார்.
இதன்போது வெளியக விளையாட்டு அரங்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தியதுடன் உள்ளக அரங்கில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
அத்தோடு நீச்சல் தடாகத்திற்கு இன்னொரு பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கும், அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், புனரமைப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான வேலைகளை செய்வதற்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டச்செயலக பிரதம பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.