கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
வளமான நாடு அழகான எதிர்காலம் எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 11 வீடுகள் வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே நாடாளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
15 வருட காலமாக நிரந்தர வீடு இன்றி தவித்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக 3 மாத கால பகுதிக்குள் விரைவாக புதிய ஓர் அழகான வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனையும் விரைவாக மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அத்துடன் வடக்கில் உள்ள நூறு பாடசாலைகள் அடுத்த வருட காலப்பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.