கியூபெக் மாகாண அரசியலின் முக்கியஸ்தரும், நகராட்சி விவகாரங்கள் துறை அமைச்சருமான ஜெனிவீவ் கில்போல்ட் (Geneviève Guilbault), தாம் அரசியலில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
தனது இரண்டு குழந்தைகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார்.
கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோல்ட் சில நாட்களுக்கு முன்புதான் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
இவர் கடந்த 2022 முதல் 2025 வரை கியூபெக்கின் துணை முதல்வராகவும், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் மிக முக்கியமான பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.