கார்த்தியின் ‘வா வாத்தியார்’ வெளியாவதில் சிக்கல்…

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ நீண்ட காலமாகவே தயாரிப்பில் இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையில் ‘வா வாத்தியார்’ வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வருவதால் ரசிகர்கள் கடுமையான அப்செட்டில் உள்ளனர்.

கார்த்தி தற்போது ‘மார்ஷல்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையில் அவருடைய நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தினை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் ‘வா வாத்தியார்’ வெளியீட்டுக்காக காத்திருப்பில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்’ படத்தினை கடந்த 5 ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போனது. இதனையடுத்து டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் ‘வா வாத்தியார்’ தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் இருந்து அவர் வாங்கிய கடனை திருப்பியளிக்கும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை ரிலீஸ் தடை விதிக்ககோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த கடனை வட்டியுடன் சேர்ந்து ரூ. 21 கோடியாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திருப்பியளிக்க வேண்டும்.

அதுவரை ‘வா வாத்தியார்’ படத்தினை வெளியிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

‘வா வாத்தியார்’ படத்துக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் இப்போதைக்கு இப்படம் ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என தெரிகிறது. இந்த மாதம் ‘வா வாத்தியார்’ வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும், சூது கவ்வும் போன்ற ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி டைரக்ஷனில் ‘வா வாத்தியார்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். அத்துடன் சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இதனிடையில் ‘வா வாத்தியார்’ படத்துடைய பாடல்கள், டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளன. எம்ஜிஆரை மையப்படுத்தி ஃபேண்டஸி கலந்த ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார் நலன் குமாரசாமி. இதனால் டிசம்பர் 24 ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு ‘வா வாத்தியார்’ படத்தினை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முயற்சி செய்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் இப்படத்தின் வெளியீடு இந்த மாதம் இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்