காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. முன்னதாக, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் திகதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. காசாவில் 10-ம் திகதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அமைதி உடன்பாட்டின்படி, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் நேற்று செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு பாதுகாப்பாக திரும்பினர். ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 28 பிணைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதில் 4 பேரின் உடல்கள் நேற்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அமைதி உடன்பாட்டின்படி, ஹமாஸ் குழுவினர் காசாவில் இருந்து வெளியேற வேண்டும். இதன்படி அவர்கள் காசாவுக்கு அனுப்பப்படாமல் எகிப்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

போரின்போது காசா பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மட்டும் காசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். பின்னர் ஜெருசலேம் நகரில் உள்ள இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்களால் காசா போர் நிறுத்தம் சாத்தியமாகி உள்ளது. அனைவருக்கும் நன்றி. போர்க் காலம் முடிந்து, மத்திய கிழக்கில் புதிய பொற்காலம் தொடங்கியுள்ளது. இதுவரை 8 போர்களை நிறுத்தியுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

இதன்பின்னர், எகிப்து சென்ற ட்ரம்ப், ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்றார். எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா அல் சிசி, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குத்தேரஸ், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உட்பட 31 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார். மாநாட்டின் நிறைவாக, ட்ரம்ப் முன்னிலையில் காசாஅமைதி ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டது. காசா அமைதி மாநாட்டில் பங்கேற்க எகிப்து அரசு சார்பில் இஸ்ரேல், ஹமாஸ், ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், 3 தரப்பினரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை