கல்விக்காக வழங்கப்படும் உதவியே மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடியது – வட மாகாண ஆளுநர்

கல்விக்காக வழங்கப்படும் உதவியே மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப் பெரிய உதவியாகும் என்றும், ‘எங்களால் எதுவும் முடியாது என்றில்லை, முயன்றால் எதுவும் முடியும்’ என்ற மனப்பாங்குடன் மாணவர்கள் தமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (08) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவசக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

சட்டத்தரணி வே.தேவசேனாதிபதி அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்தரங்கிற்கு பிரபல வர்த்தகர் நாகரத்தினம் அவர்கள் அனுசரணை வழங்கி வருகின்றார்.

மாணவர்களை நோக்கி உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் ஒவ்வொரு மாணவரின் அர்ப்பணிப்புடனும் இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். ‘இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தை முன்னணிக்குக் கொண்டு வருவோம்’ என்ற உறுதியுடன் பரீட்சை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும் என்றும், ஒவ்வொரு மாணவரின் வெற்றியும் அவரது தனிப்பட்ட வெற்றியை மட்டுமன்றி வடக்கு மாகாணத்தின் பெருமையையும் உயர்த்தும் என்றும் தெரிவித்தார்.

பதினாறு வயது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை என்பதால், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, தவறான பழக்கவழக்கங்களிலிருந்தும், நேரத்தை வீணடிக்கும் செயல்களிலிருந்தும் விலகி, கல்வியில் முழு கவனத்தையும் செலுத்துமாறு அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். சமூக ஊடகங்களின் அளவுக்கு மீறிய பயன்பாடு மற்றும் காலவிரயம் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால் நேரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அரசாங்கமும் வடக்கு மாகாண நிர்வாகமும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், பாடசாலைகள், ஆசிரியர்கள், நூல்கள் மற்றும் கல்வி வசதிகள் அனைத்தும் மாணவர்களின் வெற்றிக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன என்றார். அதேவேளை, மாணவர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவர்களே என்பதையும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், கல்விக்கான உதவியே மனித வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய முதலீடு எனக் குறிப்பிட்டார். அதற்காக மாணவர்களுக்காக இலவசக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து, அதற்கு அனுசரணை வழங்கிய ஏற்பாட்டாளர்களின் சமூகப் பொறுப்புணர்வைப் பாராட்டிய அவர், இத்தகைய முயற்சிகள் வடக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு வலுவான பங்களிப்பை வழங்கும் என்றார்.

மேலும், பெற்றோரின் தியாகங்களையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் மதித்து, கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் அவர்களின் உழைப்புக்கு மாணவர்கள் சிறந்த கைமாறு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதிக மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமன்றி, நேர்மை, ஒழுக்கம், பொறுப்பு மற்றும் மனிதநேயப் பண்புகளுடன் சிறந்த குடிமக்களாக உருவாகுவதும் கல்வியின் உண்மையான நோக்கமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்றைய மாணவர்களே நாளைய மருத்துவர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள், நிர்வாகிகள் மற்றும் நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் என்றும் குறிப்பிட்ட ஆளுநர், பெரிய கனவுகளைக் காணவும், அந்தக் கனவுகளை நனவாக்கும் வகையில் விடாமுயற்சியுடன் உழைக்கவும் மாணவர்களை ஊக்குவித்தார். முயற்சி செய்பவர்களை யாராலும் தடுக்க முடியாது என்றும், இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதப்போவது இன்றைய மாணவர்களே என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், சட்டத்தரணி வே. தேவசேனாதிபதி, அனுசரணையாளர் நாகரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்