கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுகாதார அமைச்சு விசேட நடவடிக்கை!

இலங்கைப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 5ஆவது இடத்தில் உள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சை சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும் 12 அதிநவீன கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வைத்தியசாலைக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, அடுத்த மாதத்திற்குள் மேலும் 06 இயந்திரங்களை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த இயந்திரம் ஒன்றின் பெறுமதி 60 இலட்சம் ரூபாவாகும் என்பதுடன், இதற்காக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் 72 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், குருநாகல், டி சொய்சா மகளிர் வைத்தியசாலை, கண்டி, கம்பஹா, மாத்தறை, மொனராகலை, புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பிரதான வைத்தியசாலைகளில் தற்போது இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அதேநேரம், அடுத்த மாதத்திற்குள் கிடைக்கப்பெறவுள்ள எஞ்சிய 06 இயந்திரங்களை அம்பாறை, ராகம, களுத்துறை, குளியாப்பிட்டிய, மாத்தளை மற்றும் வவுனியா ஆகிய போதனா மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நிறுவுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன், இதற்காக 42 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து இயந்திரங்களும் நிறுவப்பட்ட பின்னர், அரச வைத்தியசாலைக் கட்டமைப்பில் உள்ள மொத்த கோல்போஸ்கோபி இயந்திரங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வடையும். இதன் மூலம் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் நோயாளர்களுக்கான சிகிச்சைச் சேவைகளை வழங்குவதே அமைச்சின் முதன்மை நோக்கமாகும்.

கோல்போஸ்கோபி என்பது கர்ப்பப்பை வாய் மற்றும் யோனிப் பகுதியில் உள்ள அசாதாரண நிலைமைகளைப் பரிசோதிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ முறையாகும். ‘கோல்போஸ்கோப்’ எனப்படும் இந்த விசேட உருப்பெருக்கக் கருவியானது கர்ப்பப்பை வாய்த் திசுக்களின் விரிவான பார்வையை வழங்குவதுடன், அசாதாரண செல்கள் அல்லது புண்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க வைத்தியவர்களுக்கு உதவுகிறது.

பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று விசேட வைத்தியர்கள் மற்றும் பெண்ணோயியல் புற்றுநோய் விசேட வைத்தியர்களால் பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட அசாதாரண நிலைமைகளைக் கண்டறிவதற்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கொடிய நோயை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் முழுமையாகத் தடுக்க முடியும் என்றும், இது மனித பாப்பிலோமா வைரஸ் மூலம் பரவும் ஒரு நோய் என்றும் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 1,200 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், முறையான சிகிச்சை கிடைக்காமை காரணமாக வருடத்திற்குச் சுமார் 180 நோயாளர்கள் உயிரிழக்கின்றனர் என தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

AMILQRQRUBGS5KNESEERTSLDYA

ரொறன்ரோவில் வர்த்தக நிறுவனமொன்றில் திடீர் மின் கசிவுத் தீ விபத்து; புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

May 25, 2026

னடாவின் ரொறன்ரோ நகரின் மேற்குப் பகுதியில் (Toronto’s west end) அமைந்துள்ள வர்த்தக நிறுவனமொன்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர்

OMLNFEEWGNDCXH67ATNFWCRMKI

கனடாவில் சோகம்: மாயமான புதுப்பிறந்த குழந்தையின் உடல் எச்சங்கள் மீட்பு; இருவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு!

May 25, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், மாயமாகியிருந்த புதுப்பிறந்த குழந்தையின்

shiran

பாரிய நிதிமோசடி; சிரந்தி ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு தகவல்

May 25, 2026

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக்

ol

ஹட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய வயோதிப தம்பதி கொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

May 25, 2026

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற

namal

மாகாணசபைத் தேர்தலில் அரசு படுதோல்வியடைவது உறுதி – நாமல் ராஜபக்ஷ

May 25, 2026

காணசபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த

4DVIZ2722NDEBD3DNDYNQF54NU

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் மொன்றியலுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளேன்வில் (Blainville) நகரில், வீட்டின் பின்புறத்திலுள்ள நீச்சல் தடாகத்தில்

orr

யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்; ஒரிலியாவில் சந்தேகநபரைத் தேடும் மாகாணப் பொலிஸார்!

May 24, 2026

கனடாவின் ஒரிலியா (Orillia) நகரில் கடந்த வார இறுதியில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Antisemitic) பிரசுரங்கள் மற்றும்

XHW67JSV5FD5XMWEV4WAJKU5TU

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தீயணைப்பு வீரர் திடீர் மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அனாபொலிஸ் கவுண்டியில் (Annapolis County) பரவிய காட்டுத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு

NP7HUYGJH5EUXJTRR6VZRMQWZE (1)

ரொறன்ரோவில் 14 வயதுச் சிறுமி காணாமல் போய் ஒரு வாரம் பூர்த்தி; புதிய புகைப்படம் மற்றும் இணையதளத்தைப் பொலிஸார் வெளியீடு!

May 24, 2026

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் இருந்து 14 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போய் ஒரு வாரத்திற்கும் மேல்

CRO6W3PSD5E73DOWAAK7EKWSNU

ஸ்காபரோவில் இரு வாகனங்கள் மோதி விபத்து; மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

May 24, 2026

கனடாவின் ஸ்காபரோ பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர்

canada police261

குழந்தை மாயம்; ஹாலிஃபாக்ஸ் பொலிஸார் அவசரத் தேடுதல், நால்வர் கைது

May 24, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் மாயமாகியுள்ள புதுப்பிறந்த குழந்தை (Newborn baby) ஒன்றைக் கண்டறிவதற்காகப் பொலிஸாரும் விசேட தேடுதல் மற்றும் மீட்புக்

713dcd7a5667599efa224ad2e6e0c4bfd6cf556c5e061759081e4b1b4fc025fa

“பலவீனமான தவெக அரசு என்பதால் சிவகுமார் துள்ளுகிறார்!” – மேகதாது விவகாரத்தில் கே.என்.நேரு அதிரடி சாடல்!

May 24, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது, தங்களது காங்கிரஸ் கட்சியும் தவெக ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எவ்வித எதிர்ப்பும்