னடா பீல் பிராந்திய காவல்துறையினரால் பிராம்டனில் நடாத்தப்பட்ட வாகன சோதனையின் போது 22வது பிரிவு காவல் அதிகாரிகள் மூன்று நபர்களை கைது செய்து, குண்டுகள் நிரப்பப்பட்ட சட்டவிரோத துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 21 அன்று இரவு சுமார் 11 மணியளவில், ரோந்து பணியில் இருந்த காவல் அதிகாரிகள், கஞ்சா தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு வாகனத்தை விசாரித்தனர். விசாரணையின் போது, வாகனத்தில் இருந்த ஒருவரின் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகள் நிரப்பப்பட்ட சட்டவிரோத கைத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாகனத்தில் இருந்த மூவர் கைது செய்யப்பட்டு மறைத்து ஆயுதம் எடுத்துச் செல்வது, தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதம் அனுமதியின்றி வைத்திருப்பது குறித்து அறிந்திருந்த நிலையில் வாகனத்தில் இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.