கனடா தினத்தில் முஸ்லிம் குடும்பத்தின் மீது தாக்குதல்: ஒன்ராறியோ நபர் மீது குற்றச்சாட்டுப் பதிவு

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், தண்டர் பே (Thunder Bay) நகரில் கனடா தினத்தன்று (ஜூலை 1) இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 41 வயதுடைய நபர் ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல் இன வெறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், நகரின் வெறுப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (hate crime unit) இந்த விசாரணையை ஒப்படைத்துள்ளனர்.

கடந்த ஜூலை 1 ஆம் தேதி மதியம் 12:45 மணியளவில் தண்டர் பே நகரின் வில்லா வீதி (Villa Street) மற்றும் கம்பர்லாண்ட் வீதி வடக்கு (Cumberland Street North) ஆகிய பகுதிகள் இணைந்திடும் இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கும் மேலான நிலையில் தற்போது காவல்துறை இக்குற்றச்சாட்டுகளை அறிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது மூன்று தாக்குதல் குற்றச்சாட்டுகள், உடற்காயத்தை ஏற்படுத்தியதற்கான ஒரு தாக்குதல் குற்றச்சாட்டு, கொலை மிரட்டல் அல்லது கடுமையான காயம் ஏற்படுத்துவதாக அச்சுறுத்தியமை மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றக் காவலில் (remanded) வைக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீன முஸ்லிம் குடும்பமே இலக்கு:

மத்திய கிழக்கில் நீதி மற்றும் அமைதிக்கான கனேடியர்கள் அறக்கட்டளையின் (CMEF) கீழ் இயங்கும் ‘இனவெறி எதிர்ப்புத் திட்டம்’ (ARPCF) என்ற அமைப்பு, பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பாலஸ்தீன முஸ்லிம் குடும்பத்தினர் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி: பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி, இரு இளம் குழந்தைகள் மற்றும் அவரது 63 வயதுடைய தாயாருடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்தத் கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் வன்முறையாக மாறுவதற்கு முன்பாக, அக்குடும்பத்தினரை நோக்கி “f*** Muslims” என்பது உள்ளிட்ட கடுமையான இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் ஆபாசக் கெட்ட வார்த்தைகளைப் பேசி வசைபாடியுள்ளனர்.

“இந்தத் தாக்குதலானது இஸ்லாமிய வெறுப்பு (Islamophobia) மற்றும் பாலஸ்தீன எதிர்ப்பு இனவாதம் ஆகிய இரண்டின் வெளிப்பாடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்” என அந்த அமைப்பு ஜூலை 17 அன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அக்குடும்பத்தில் இருந்த இரு பெண்கள் இஸ்லாமிய அடையாள ஆடையுடன் இருந்ததால் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய வன்முறைகள் தனித்து உருவாவதில்லை; பாலஸ்தீனியர்களை மனிதநேயமற்றவர்களாகச் சித்தரிப்பதும், முஸ்லிம் சமூகங்கள் மீது சந்தேகப் பார்வையை இயல்பாக்குவதும் தான் கனேடிய மண்ணில் இத்தகைய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என அந்த அமைப்பின் முதன்மை ஆய்வாளர் ஜமிலா எவைஸ் (Jamila Ewais) சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறை மற்றும் சிவில் அமைப்புகளின் கருத்து:

இத்தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவருக்கு அவசர மருத்துவக் குழுவினர் (EMS) முதலுதவி வழங்கியதுடன், உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் அவர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஜூலை 16 அன்று வெளியான போலீஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்குத் தங்களது கையடக்கத் தொலைபேசி பதிவுகள் மற்றும் பாதுகாப்பு கேமரா (CCTV) காட்சிகளை வழங்கி உதவிய பொதுமக்களுக்குத் தண்டர் பே காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், “எங்கள் சமூகத்தில் ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பாக வாழும் உரிமையுள்ளது. வெறுப்பு அல்லது பாகுபாட்டின் அடிப்படையில் எவரேனும் இலக்கு வைக்கப்பட்டால், அதுகுறித்து தீவிர விசாரணை நடத்த தண்டர் பே காவல்துறை கடமைப்பட்டுள்ளது” என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, வெறுப்புக் குற்றப் பிரிவின் தலையீட்டை வரவேற்றுள்ள ARPCF அமைப்பு, இச்சம்பவம் குறித்து ஒரு முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளதுடன், கனேடியப் பொது அதிகாரிகள் அனைவரும் இந்த இனவெறித் தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109