ஒட்டாவா, கனடா — 2030-ஆம் ஆண்டிற்குள் கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க வேண்டும் என்ற இலக்கை, எட்ட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் துறை (ECCC) தனது அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பாதியை மட்டுமே கனடாவால் தற்போதைய சூழலில் எட்ட முடியும் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.
பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய அரசு, தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த அறிக்கை, கனடா அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கனடா தனது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 2005-ஆம் ஆண்டு இருந்த அளவை விட 40% முதல் 45% வரை குறைக்க முடியும் என, சர்வதேச ரீதியாக உறுதியளித்திருந்தது.
எனினும், கனடா தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகளின் மூலம், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் வெறும் 21% மட்டுமே குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.