கனடாவில் கொவிட் – 19 நினைவு நாள் வருடாந்தம் மார்ச் 11 ஆம்திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பிராம்டன் நகர மன்றத்தில் உள்ள கொடிகள் COVID-19 நினைவு தேசியக் கண்காணிப்பு நாளை முன்னிட்டு அரைநிலைக்கு தாழ்த்தப்பட்டிருந்தன. மேலும் நகர மன்றத்தின் கடிகார கோபுரத்தின் விளக்குகளும் மங்கச் செய்யப்பட்டன என்பது குறிப்பித்தக்கது.
இந்த ஆண்டு, COVID-19 உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் — குறிப்பாக அன்புக்குரியவர்களை இழந்தவர்களையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களையும், அதன் நீடித்த விளைவுகளை இன்னும் அனுபவித்து வருபவர்களையும் நாம் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம் எனவும் அதே நேரத்தில் அந்த இக்கட்டான காலகட்டத்தில் காலகட்டம் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களின் சேவையையும்இ எங்கள் சமூகத்தின் உறுதியையும் நன்றியுடன் நினைவுகொள்கின்றோம் என பிரம்டன் மாநகரசபை தெரிவித்திருக்கின்றது.