இலங்கையில் இந்த நாட்களில் நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும்போது சாரதிகள் கவனமாக இருக்குமாறு வீதி மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாகன முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனம் செலுத்தவும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடு : ஆபத்தான பொருளுடன் சிக்கிய இளைஞர்
கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடு : ஆபத்தான பொருளுடன் சிக்கிய இளைஞர்
வாகனங்களை கட்டுப்படுத்தக்கூடிய வேகம்
எனவே, வானிலை குறித்து வாகன சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறும்,வாகனங்களை கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.
ஆகவே, வாகனங்களை செலுத்தும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.