அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் கஞ்சா பயிரிட்டு வந்த பெலாரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் அவர் கஞ்சா பயிரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காக அவர் கஞ்சா பயிரிட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வீடு கராப்பிட்டிய மருத்துவமனையின் மருத்துவருக்கு சொந்தமானது என்றும், சந்தேக நபர் வீட்டை வாடகைக்கு எடுத்து அதற்காக மாத வாடகையாக ரூ.1.5 லட்சம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தென் மாகாண பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.