இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) 2026 ஏலமானது செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிலையில் அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீரரான கமரன் கிறீன் 25.2 கோடி இந்திய ரூபாய்களுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸால் ஏலமெடுக்கப்பட்டார்.
இதில் 18 கோடியே அவருக்கு செல்லுமென்பதுடன், மிகுதிப் பணமான வீரர்களின் நலனுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் பயன்படுத்தப்படும்.
இந்நிலையில் இலங்கையின் வனிது ஹசரங்கவை 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு லக்னோ சுப்பர் ஜையன்ட் வாங்கியிருந்தது.
இதேவேளை இந்தியாவின் வெங்கடேஷ் ஐயர் 7 கோடி இந்திய ரூபாய்களுக்கு நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவால் வாங்கப்பட்டிருந்தார்.
இதுதவிர தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லரை 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு டெல்லி கப்பிட்டல்ஸ் வாங்கியிருந்தது.
இந்நிலையில் 1 கோடி இந்திய ரூபாய்களுக்கு தென்னாபிரிக்காவின் குயின்டன் டி கொக்கை மும்பை இந்தியன்ஸ் வாங்கியிருந்தது.
இதேவேளை இங்கிலாந்தின் பென் டக்கெட்டை 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு டெல்லி கப்பிட்டல்ஸ் வாங்கியிருந்தது.