எபோலா வைரஸ் பரவல் தீவிரம்: பல நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள்

கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகையான ‘புந்திபுகியோ’ என்ற எபோலா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவும் நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

கொங்கோவில் கடந்த மே 15 முதல் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 220 பேர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

உகாண்டாவிலும் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார். நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஆபிரிக்க நாடுகள் சில உள்ளூர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள கிழக்கு கொங்கோவின் புனியா நகருக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் கொங்கோ உடனான அனைத்து நேரடி விமான சேவைகளையும் உகாண்டா ரத்து செய்துள்ளதுடன், எல்லைப் பகுதியில் பேருந்து மற்றும் படகுப் போக்குவரத்துகளையும் 4 வாரங்களுக்கு முடக்கியுள்ளது.

சர்வதேச அளவில் பல நாடுகள் தங்களின் எல்லைகளில் கடுமையான பயணத் தடைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. கடந்த 21 நாட்களில் கொங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்த அமெரிக்கர் அல்லாத வெளிநாட்டினர் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கனடா மற்றும் பஹாமாஸ் ஆகிய நாடுகள் கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் குடிமக்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைய தற்காலிகத் தடை விதித்துள்ளன.

மேலும், இந்த நாடுகளிலிருந்து வரும் கனடா குடிமக்கள் 21 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதேபோல ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இந்நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 30 நாட்கள் தற்காலிகத் தடையை விதித்துள்ளன. பாதிப்பு இல்லாத நாடுகளும் தங்களின் விமான நிலையங்களில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

குறிப்பாக இந்தியா, முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் கூடுதல் மருத்துவப் பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், தனது நாட்டு குடிமக்களை கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த வாரத்தில் புது டெல்லியில் நடைபெறவிருந்த ‘இந்தியா – ஆபிரிக்கா உச்சி மாநாடு’ மற்றும் சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் மாநாடு ஆகியவற்றை இந்தியா ஒத்திவைத்துள்ளது.

தாய்லாந்து மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கொங்கோ, உகாண்டாவிலிருந்து வரும் பயணிகள் தங்களின் வருகையின் போது எபோலா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கியுள்ளதோடு, விமான நிலையங்களில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன.

இந்த ‘புந்திபுகியோ’ எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான இரத்தப்போக்கு காய்ச்சல் ஏற்படும் என்றும், பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் திரவங்கள் மூலமாகவே இது பரவும் என்பதால், இத்தகைய பயணக் கட்டுப்பாடுகள் நோய் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

si

அரசின் செயற்பாடுகள் ஐனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கின்றன – சித்தார்த்தன்

June 27, 2026

மிகக் கொடூரமான ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவிப்பதன்

iran

எங்களின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது மட்டுமே – ஈரான்

June 27, 2026

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதை நோக்கியதாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய, அங்கு “மிகவும் வலுவான சோதனை மற்றும்

veni

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு

June 27, 2026

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளின்படி, சுமார் 2,980 பேர்

Praga

யாழ்.சர்வதேச விளையாட்டரங்கு திட்டத்தில் மாற்றம்!

June 27, 2026

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிறைவேற்றுச் சபையினால் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஒன்றை நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டம்

death

மட்டு. வைத்தியசாலையில் குழந்தையைப் பிரசவித்த பெண் டெங்குவால் உயிரிழப்பு

June 27, 2026

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர், அண்மையில் பெண்குழந்தையை பெற்றெடுத்த

Selvam

மனித எச்சங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென்றால் அது செம்மணி புதைகுழியாகவே இருக்கும் – செல்வம் அடைக்கலநாதன்

June 27, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் போது உதய கம்மன்பிலவின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

acci main

அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் தொடர் விபத்து

June 27, 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையிலுள்ள 31ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற

arres

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது

June 27, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த

CWY7Q7QYY5DLXEWDI2XETVXMWU

முக்கிய ஆதாரங்கள்’ பறிமுதல்: கேப் பிரெட்டன் நபர் மீது பாலியல் கடத்தல் குற்றச்சாட்டு

June 26, 2026

இந்த வார தொடக்கத்தில் வீடு ஒன்றிலிருந்து “முக்கிய ஆதாரங்களை” பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அதனைத் தொடர்ந்து கேப் பிரெட்டன்

police rcmp

நியூ பிரன்சுவிக் (N.B.) பால்மோரல் அருகே விபத்தில் ஒருவர் பலி: இரண்டு வாகனங்களைத் தேடும் முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு

June 26, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில் உள்ள பால்மோரல் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

hamilton police1

ஹாமில்டனில் வாகன நிறுத்துமிடத் தகராறு: பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய இரு பெண்கள் கைது

June 26, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton, Ont.) நகரில் கடந்த வார இறுதியில் வாகனத்தை நிறுத்தும் இடம் (Parking spot) தொடர்பாக ஏற்பட்ட

10_thirumavalavan-expresses-anguish-over-criticisms-26-06-2026

இழிவாக விமர்சித்து வருகிறார்கள்; வீடியோ வெளியிட்டு திருமாவளவன் ஆதங்கம்!

June 26, 2026

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தனது அரசியல் பயணம் மற்றும் எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் குறித்து வீடியோ வாயிலாக விரிவான