எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும்அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது–வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது. இந்தத் தீவகப் பகுதி மக்கள் எதிர்பார்த்திராத பல மிகப் பெரிய அபிவிருத்திகள் இனி நடக்கும். அந்த நல்ல மாற்றங்களை இங்குள்ள மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் விசேட பங்கேற்புடன் இன்று (22.04.2026) புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்குரிய பிரதான போக்குவரத்து மார்க்கமாகவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இது எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது. குறிப்பாக, நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் இந்த இறங்குதுறையில் தமது படகுகளை நிறுத்தி வைப்பதில் பெரும் இடர்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அதற்கான நிரந்தரத் தீர்வும் தற்போது எட்டப்பட்டுள்ளது.
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தீவகப் பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது.

இப்பகுதிகளின் வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கும் அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த இறங்குதுறை புனரமைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் நெடுந்தீவு இறங்குதுறையையும் புனரமைப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
இந்த இறங்குதுறையானது 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்திலேயே புனரமைக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் இவ்வளவு பெரிய தொகையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்கள் அல்லது உதவிகள் ஊடாகவே செய்யப்பட்டன. ஆனால், தற்போது இலங்கை அரசாங்கத்தின் சொந்த நிதியில், அதாவது மக்களின் வரிப்பணத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அபிவிருத்தித் திட்டம் தீவக மக்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும். இதற்காக உழைத்த  அமைச்சர் பிமல் ரத்நாயக்க,  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த அரசாங்கத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் துரித கதியில் அபிவிருத்திகள் நடைபெறுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. எப்படியாவது தேவையற்ற கருத்துகளைக் கூறி குழப்பங்களை ஏற்படுத்தவே அவர்கள் முயற்சிக்கின்றனர். உண்மையில், அபிவிருத்தித் திட்டங்களின் தாமதத்துக்கு அரசாங்கம் காரணமல்ல. ஒரு சில அரச திணைக்களங்கள்தான் அதற்குக் காரணமாகின்றன. அவர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு, அரசாங்கத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் செயற்பட முன்வர வேண்டும், என்றார் ஆளுநர்.
இந்தக் குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது