எதிர்வரும் 3 தினங்களுக்கு தொடரவுள்ள மழை..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது என்று என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாகவும், இலங்கையின் தென்மேற்குப் பகுதியை மையம் கொண்டு நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாகவும், வடகீழ்ப் பருவக்காற்றுக் கொண்டு வரும் அதிக ஈரப்பதன் காரணமாக இவ்வாறு நடைபெற வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறிப்பாக நாளையும்(10.12.2025) நாளை மறுதினமும் (11.12.2025) நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் நிலப்பகுதிகள் அவற்றின் தரைக்கீழ் நீரை உறிஞ்சும் முழுக்கொள்ளளவை அடைந்து விட்டன.

குளங்கள் அவற்றின் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. சில பெரிய குளங்களின் மேலதிக நீர் வெளியேற்றத்துக்கான கதவுகள் இன்று பகல் திறக்கப்பட்டன(இரணைமடு). இந்நிலையில் கிடைக்கும் மழை வீழ்ச்சி முழுவதும் தரை மேற்பரப்பில் தேங்குவதுடன் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தையும் உருவாக்கக்கூடும்.

எனவே வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள நிகழ்வுகள் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம். மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கனமழை கிடைக்கும் என்பதனால் குருநாகல், கண்டி, மாத்தளை,நுவரெலியா, பதுளை, கேகாலை, மாவட்டங்களின் சில பகுதிகளில் மண்சரிவுக்கான வாய்ப்புக்களும் உண்டு.

நிலச்சரிவு நிகழ்வைப் பல காரணிகள் தூண்டினாலும் இலங்கையைப் பொறுத்தவரை தொடர்ச்சியான மற்றும் கன மழைவீழ்ச்சியே காரணம். இலங்கையின் தென்கிழக்கே காணப்படும் காற்றுச் சுழற்சியும், தென்மேற்கே நிலவும் வளிமண்டல தளம்பல் நிலையும் மேலே குறிப்பிட்ட குருநாகல், கண்டி, மாத்தளை,நுவரெலியா, பதுளை, கேகாலை, மாவட்டங்களுக்கு கன மழை கிடைக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் எதிர்வரும் 12.12.2025 இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

தற்போது நிலவும் வளிமண்டல நிலைமைகள் காரணமாக இலங்கை முழுவதுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஒரு சில தாழ் நிலப்பகுதிகளில் சிறிய அளவில் வெள்ள அனர்த்தம் நிகழுக் கூடும். உண்மையில் வழமையான பருவ மழைக் காலங்களில் இவ்வாறான மழை என்பது சாதாரணமானது.

ஆனால் டிட்வா புயலின் காரணமாக இலங்கை முழுவதும் மிகக் கனமழை கிடைத்துள்ளதனால் இனி வரும் நாட்களில் கிடைக்கும் கனமான மழை கூட (75 மி.மீ முதல் 125 மி.மீ) சில பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது சிறந்தது. எங்கள் மத்திய மலை நாட்டில் இன்றும் கூட சில சில பகுதிகளில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் இடம்பெறுகின்றன. பல பிரதேசங்களில் கிடைத்த கனமழை காரணமாக மண்ணியல் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதிகளிலும் சற்று கனமான மழை கிடைத்தாலே அது நிலச்சரிவு நிகழ்வைத் தூண்டும்.

அத்தோடு எதிர்வரும் 15ம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

sou

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நன்கொடை

December 10, 2025

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக

kos

71 குடும்பங்கள் வெளியேற்றம்

December 10, 2025

மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08)

jail

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து திருடிய 12 பேர் கைது

December 10, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களை சூறையாடியதாகக் கூறப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்

ila

இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

December 10, 2025

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர்

fr

ஜனாதிபதியின் செயலாளருடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

December 10, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லேம்பெர்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

wo

பொதுமக்கள் மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்

December 10, 2025

பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின்

ve

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்?

December 10, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில்

gg

27 வயது இளைஞர் விபத்தில் பலி

December 10, 2025

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தானது நேற்று

nad

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் அரச ஆவணங்களும் சேதம்!

December 10, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் (Department of

mo

இலங்கை மோட்டார்ஸ் போர்ட்டில் விரைவான மாற்றம்

December 10, 2025

இலங்கையின் முன்னணி கார்ட்டிங் குழுவான மோரா ரேசிங், நுழைவு நிலை கார்ட்டிங் முதல் சர்வதேச ஃபார்முலா பந்தயம் வரை மோட்டார்

log

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும்! – கனேடிய நாடாளுமன்றில் லோகன் கணபதி

December 10, 2025

கனேடிய நாடாளுமன்றில் Progressive Conservative Party இன் உறுப்பினர் லோகன் கணபதி டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தனது

thann

முல்லைத்தீவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 10, 2025

தண்ணிமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால், தற்போதைய மழை நிலையை கருத்திற் கொண்டு வான் கதவுகளை திறக்க