எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் – தமிழ்பேசும் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படும்

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, அக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 3 ஆம் திகதி (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளும் தமது சுயாதீனத்துவத்தையும் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பேணிக்கொண்டு, பொது இணக்கப்பாடு எட்டப்படும் விடயங்களில் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்தன.

அதன் நீட்சியாக, தமிழ்பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரமொன்றை வழங்குமாறு அக்கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மேற்படி 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திப்பதற்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது அரசியல் கைதிகளை விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், மலையக தமிழ் மக்களுக்கான வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றல், நீண்டகாலமாக நடாத்தப்படாமல் நிலுவையில் உள்ள மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல், அரசியலமைப்பின் உறுப்புரை 16(ஏ) மற்றும் அரசகரும மொழிகள் கொள்கையுடன் தொடர்புடைய சகல அரசியலமைப்பு விதிகளையும் நடைமுறைப்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவுக்குக்கொண்டுவரல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்டுவரும் முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அவர்களது அக்கறைக்குரிய விடயங்கள் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

759849590_1568950914630156_596272536240665203_n

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

July 29, 2026

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான

2

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி!

July 29, 2026

கரூர்: திமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய அரசியல் பிரமுகருமான செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று

1

தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே 3-ம் இடத்திற்குத் தள்ளுவதா? – சீமான் கண்டனம்!

July 29, 2026

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின்

758037446_1045398538354019_6141625928540443025_n

தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் கடலில் பிரமாண்ட படகுப் பேரணி

July 29, 2026

இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து வடபகுதி மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் தமிழக இழுவைப் படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக்

anura may 26

எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் – தமிழ்பேசும் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படும்

July 29, 2026

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, அக்கட்சிகளின்

759390981_1072436365239046_9209066260461902919_n

பருத்தித்துறை நகரசபை, இலங்கை இராணுவ முகாம்களை அகற்றக் கோரி மீண்டும் போராட்டத்தை நடத்தவுள்ளது.

July 29, 2026

ஓராண்டுக்கு முன்பு இதேபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்ட போதிலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, சபையின் நிர்வாக எல்லைக்குள்

peel poli

பிராம்ப்டன் துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஆயுதம் ஏந்திய ஆபத்தானவராகக் கருதப்படும் 19 வயது இளைஞருக்குக் கனடா தழுவிய பிடியாணை

July 29, 2026

ஒன்டாரியோவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் ஏப்ரல் மாதம் இருவர் படுகாயமடையக் காரணமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, 19 வயது

AB2WZMOCSRBWDHP4MDQ3RDV3VI

ரொறன்ரோவில் பாலியல் சேவைக்குக் பணம் செலுத்தியவருக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளை: பெண் தேடப்பட்டு வருகிறார்

July 29, 2026

டவுன்டவுன் ரொறன்ரோவில் வார இறுதியில் பாலியல் சேவைகளுக்காகப் பணம் செலுத்திய நபர் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையடித்த சம்பவத்தைத்

EQLT6ZRQENFFFNBTQBLPW2R6JQ

15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலால் ஹால்டன் பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கை வெற்றி

July 29, 2026

ரொறன்ரோ பகுதியில் (GTA) இயங்கி வந்த குற்றவியல் வலையமைப்பினால் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலின்

ss

கடன் தரவரிசையை ‘CCC+/C’ ஆக உறுதிப்படுத்தியது S&P Global Ratings!

July 29, 2026

இலங்கையின் நீண்டகால மற்றும் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய இறையாண்மை கடன் தரவரிசையை ‘CCC+/C’ ஆக எஸ்டி

cus

காகிதமற்ற சுங்க அறிக்கை ஒக்டோபர் முதல் நடைமுறை

July 29, 2026

காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல்

ha

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் நற்பண்புகள்இ ஒழுக்கம் மற்றும் ஆன்மீகத்திலேயே தங்கியுள்ளது – பிரதமர்

July 29, 2026

பௌதிக வளர்ச்சி எவ்வளவு தூரம் இடம்பெற்றாலும், ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் நற்பண்புகள், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக