மாகாண சபைத்தேர்தலை வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். ஒரு இராமநாதன் அர்ச்சுனாவிற்கு 159பேரும் பயப்படுவதை நினைத்து வெட்கமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்திலே பொருளாதார மத்திய நிலையமே இல்லை. ஆனாலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இருக்கின்ற பொருளாதார மத்திய நிலையத்தை சீரமைக்க அமைச்சர் சந்திரசேகருக்கு எவ்வளவு கூறியும் அதில் அவர் ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை.
மேலும் பிரஜா சக்தி என்ற ஒன்றை இந்த அரசாங்கம் கொண்டு வந்தது. அதுவும் இந்த அரசாங்கத்தின் ஏமாற்று வேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் சட்டவிரோத புத்தர் சிலை, வேந்தன் கண்டனம்
திருகோணமலையில் சட்டவிரோத புத்தர் சிலை அமைக்கப்பட்டமைக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பிரதேசத்தில் ஊடகக்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் கடற்கரையில் சட்டத்திற்கு புறம்பாக மக்களின் ஏதிர்ப்பையும் மீறி புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
கடந்தகால அரசாங்கங்கள் வடக்கு கிழக்கில் பல விகாரைகளை அத்துமீறி கட்டியிருந்தன. அதற்கு துணையாக இராணுவம், போலீஸார், புத்தபிக்குகள் துணையோடுதான் இந்த புத்த விகாரைகள் அமைக்கப்பட்டன.