இரண்டாவது முறையாக பதவியேற்ற நாள் முதல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்தியாவின் மீது பல்வேறு வகையில் வர்த்தகப் போரை செய்து வருகிறார்.
இதனை சமாளிக்கும் வகையில் அமைதியாக இந்திய இறையாண்மையை காக்கும் வகையிலும் இந்திய ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கும் வகையிலும், நடவடிக்கைகளில் இந்திய அரசு செய்து வருவது உலக அரங்கில் நற்பெயரை பெற்று வருகிறது.
அமெரிக்காவின் மக்கள் தொகை 338 மில்லியன் அதற்கு தேவையான பொருட்களை இந்தியா மற்றும் சீனா பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. அமெரிக்காவை நம்பி ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு திடீரென 50 சதவீதம் மேல் இறக்குமதி வரியை திணித்து மிரட்டி வருகிறது.
இதனை சமாளிக்கும் வகையில் 448 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஐரோப்பா ஒன்றியத்திற்கு தடையில்லா வர்த்தகம் 93 சதவீதம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை 26 மில்லியன் கொண்ட நாட்டிற்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விலக்கு பெற்று தடையில்லா வர்த்தகத்தை இந்தியா பெற்றுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவின் மீது உலக நாடுகள் பெரும் நம்பிக்கையும் சவால்களை எதிர்நோக்கும் அணுகுமுறையும் பாராட்டுக்குரியது என உலகத் தமிழ் வர்த்தக சங்கம் கூறியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்காவிற்கு தகுந்த பாடங்களை அழித்து வரும் இந்தியா 70 நாடுகளுடன் நல்லுறவுகளையும் ராஜாங்க உறவுகளையும் மேம்படுத்தி வருகிறது. உலக அரங்கில் வல்லரசாக உயர்ந்து வரும் இந்தியா அனைத்து நாடுகளுக்கு இடையே நட்புறவு பேணுவதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறது என உலக தமிழ் வர்த்தக சங்க தலைவர் தெரிவித்தார்.