உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பு அறிமுகம்

அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), உலகத் தமிழர்களின் அறிவு, ஆற்றல், தொழில்சார் அனுபவம் மற்றும் பொருளாதார வளங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பையும் (Global Tamil Economic and Social Network), அதன் ஒருங்கிணைப்புக் குழுவையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழில்முனைவையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குதல், சமூக மேம்பாட்டை முன்னெடுத்தல் ஆகியவை இவ்வலையமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.
குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், உலகளாவிய ரீதியில் பொருளாதார மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியுள்ள தமிழ்ச் சமூகங்களின் மேம்பாட்டிற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆரம்பகட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்களாகப் பின்வருவோர் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்:
முனைவர் இரா. சீனிவாசன் – பொருளாதார மற்றும் பொதுக் கொள்கை நிபுணர், தமிழ்நாடு, இந்தியா.
திரு. சிவராஜா இராமநாதன் – தொழில்முனைவோர், StartupTN முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி, தமிழ்நாடு, இந்தியா.
பேராசிரியர் க. அமிர்தலிங்கம் – கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை.
பேராசிரியர் இ. ஆ. செல்வநாதன் – கிரிஃபித் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா.
பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் – வவுனியா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், இலங்கை.
பேராசிரியர் ஜெயப்பிரபா சுரேஷ் – கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
திரு. உமேஷ் வல்லிபுரம், CPA, CA – நிதி மற்றும் நிறுவன அபிவிருத்தி நிபுணர், கனடா.
இவ்வாரம்பக் குழுவினர் இணைந்து வலையமைப்பின் செயற்பாட்டுத் திட்டங்களையும் முன்னுரிமைகளையும் வகுப்பதுடன், பல்வேறு நாடுகளிலிருந்து மேலும் துறைசார் நிபுணர்களையும் தொழில்சார் வல்லுநர்களையும் இணைத்து, ஒருங்கிணைப்புக் குழுவை விரிவுபடுத்தவுள்ளனர்.
இம்முயற்சி தொடர்பாக அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில்,
“உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களின் அறிவு, அனுபவம், திறமை மற்றும் பொருளாதார வளங்களை ஒன்றிணைத்து, அவற்றை நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.
உலகளாவிய தமிழர் புலம்பெயர் சமூகமாகிய எமது உள்ளங்களில், இலங்கையின் வடக்கு–கிழக்கில் வாழும் தமிழர்களுக்கும், உலகின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்கொள்ளும் தமிழர்களுக்கும் தனித்துவமான இடமுண்டு. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், பொருளாதாரத் தற்சார்பையும் சமூக வலுவூட்டலையும் உறுதிப்படுத்துவதும் எமது முக்கிய முன்னுரிமைகளாகும்.
வெறுமனே தொடர்புகளை ஏற்படுத்துவதுடன் நின்றுவிடாமல், முதலீடுகள், தொழில்முனைவு, வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக மேம்பாட்டின் ஊடாகத் தமிழ்ச் சமூகங்களின் பொருளாதார வலுவூட்டலை முன்னெடுக்க விரும்புகிறோம்.”
எனத் தெரிவித்தார்.
உலகளாவிய தமிழர் சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட விரும்பும் அனைத்து நிபுணர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளையும் இவ்வலையமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அனைத்துலகத் தமிழர் பேரவை அழைப்பு விடுக்கிறது.
அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT)
ரொறன்ரோ, கனடா
16.10.2026 See less

nimal

உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பு அறிமுகம்

October 29, 2026

அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), உலகத் தமிழர்களின் அறிவு, ஆற்றல், தொழில்சார் அனுபவம் மற்றும் பொருளாதார வளங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில்,

ku

குறிகட்டுவான் – நெடுந்தீவுக்கான படகு சேவைகள் பாதிப்பு

October 29, 2026

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுக்கு இடையிலான படகுச் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளதால்,

in

இந்திய நாட்டவர் 454 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது

October 29, 2026

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால்நேற்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 454

5

தங்கத்தால் ஜொலிக்கும் புதிய நடைபாதை: துபாயில் புதுமை!

October 29, 2026

துபாய் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 24 காரட் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட புதிய நடைபாதை ஒன்றை இந்த ஆண்டின்

anu

கனியவளத் துறைக்கு பலமான முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பான திட்டங்கள் பற்றி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

October 29, 2026

இந்நாட்டின் கனியவளத் துறைக்கு பலமான முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பது குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

upul

ஆட்சியில் உள்ள எந்த அரசாங்கமும் பௌத்தத்துக்கு எதிராக செயற்படாது – ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும

October 29, 2026

அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.ஆனால் அது எவ்வாறான செயற்பாடு என்று குறிப்பிடுவதில்லை.பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும்

Nati

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

October 29, 2026

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவர் / பணிப்பாளர் நாயகம்

arrest

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கைது!

October 29, 2026

பொலிஸ் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலையத்தின்

867793981_1826855906111595_6657237902329207622_n

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி

October 28, 2026

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி மீனவர்களை தேடிச் செல்லவுள்ள அணியினருக்கான பாதுகாப்பு சட்டைகளை (safety jacket)

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயணத் தடையை நீக்கும் கோரிக்கை: நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு CIDக்கு உத்தரவு

October 28, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக குற்றப்புலனாய்வு

namal 22222222222

பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாமலுக்கு பிணை வழங்கவேண்டும் – நீதிமன்றத்தில் அலி சப்ரி

October 28, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர். அலிசப்ரி நாமல்ராஜபக்சவின் பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை

gajendran

நாடு திரும்புவோருக்கு இதுவா பாதுகாப்பு?கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடும்பத்தினருடன் இணைக்கவேண்டும்- கஜேந்திரன்

October 28, 2026

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டுள்ள கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடு;ம்பத்தினருடன் இணைக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற