குறிகட்டுவான் – நெடுந்தீவுக்கான படகு சேவைகள் பாதிப்பு

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுக்கு இடையிலான படகுச் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளதால், நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ ஆகிய படகுகள் ஏற்கனவே பழுதடைந்திருந்த நிலையில், ‘குமுதினி’ படகு மட்டுமே சேவையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் […]

இந்திய நாட்டவர் 454 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால்நேற்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 454 மில்லியன் ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி (Ecstasy) ஆகிய போதைப்பொருட்களுடன் 46 வயதான இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலால் பொறியியலாளரான குறித்த பயணி, கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR 654 என்ற விமானத்தில் பாரிஸிலிருந்து தோஹா வழியாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக […]

தங்கத்தால் ஜொலிக்கும் புதிய நடைபாதை: துபாயில் புதுமை!

துபாய் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 24 காரட் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட புதிய நடைபாதை ஒன்றை இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்க துபாய் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. துபாயின் வரலாற்றுச் சிறப்புமிக்க டேரா பகுதியில் அமைந்துள்ள ‘துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ வளாகத்தில் இந்த நடைபாதை அமையவுள்ளது. இந்த பிரம்மாண்ட வணிகப் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட தங்க நகை வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது உலகிலேயே முதன்முறையாக அமைக்கப்படும் மிக நீளமான தங்க நடைபாதை என்று துபாய் […]

கனியவளத் துறைக்கு பலமான முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பான திட்டங்கள் பற்றி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

இந்நாட்டின் கனியவளத் துறைக்கு பலமான முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பது குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, கனியவளத் துறைக்கு தேவையான காணிகளை இனங்காணல் மற்றும் கனிய வளங்களைக் கண்டறிதல் ஆகியவற்றின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், கஹட்டகஹ மற்றும் எப்பாவல ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் […]

ஆட்சியில் உள்ள எந்த அரசாங்கமும் பௌத்தத்துக்கு எதிராக செயற்படாது – ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும

அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.ஆனால் அது எவ்வாறான செயற்பாடு என்று குறிப்பிடுவதில்லை.பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆட்சியில் உள்ள எந்த அரசாங்கமும் பௌத்தத்துக்கு எதிராக செயற்படாது என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிராக செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் […]

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவர் / பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை, சாமபுர பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் அங்குள்ள கட்டிடங்கள் அரசுக்குச் சொந்தமானவை எனக்கூறி, இடைக்காலக் குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்து, அதைத் தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்துள்ளதாக இவர் […]

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கைது!

பொலிஸ் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், ஹோமாகம பொலிஸ் நிலையக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த சம்பவத்திற்காக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவருக்கு மேலதிகமாக, அப்பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் […]