சென்னை:
திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் அதிரடியாக வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லத்திற்கு இன்று காலை சென்ற காவல்துறையினர், அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தவெக அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி திட்டமிட்டு அப்படிப் பேசியிருக்கலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது” என்று ஆவேசமாகக் கூறினார்.
மேலும், “அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். பெண்கள் குறித்து எக்காரணம் கொண்டும் தவறாகப் பேசக்கூடாது” என்று அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உதயநிதியின் கைது முற்றிலும் நியாயமான நடவடிக்கையே என்று அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
#MinisterArunraj #UdhayanidhiStalin #TVKGovt #DMK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #UdhayanidhiArrest #PoliticalUpdate #TamilNewsLive