அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்த இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், ஈரானின் அதியுயர் தலைவர் தனது நாட்டு இராணுவத்திற்கு மிக முக்கியமான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு: ஈரானின் அரசு நடத்தும் செய்திச் சேவையான IRIB ஊடாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஈரானின் அனைத்து இராணுவப் பிரிவுகளும் (Military Units) உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்துமாறு (Stop Firing) அதியுயர் தலைவர் கட்டளையிட்டுள்ளார்.
நிபந்தனையுடன் கூடிய அமைதி: “இது போரின் முடிவு அல்ல; ஆனால் அனைத்து இராணுவப் பிரிவுகளும் அதியுயர் தலைவரின் உத்தரவைப் பின்பற்றித் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்பின் காலக்கெடு: டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவடைவதற்குச் சற்று முன்னதாகப் பாகிஸ்தான் மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகளின் பலனாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.