இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார்.

போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம் அகற்​றப்​படும். ஹமாஸ் குழு​வின் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடி​யாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்ட பிறகு காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும்.

ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை கைவிட வேண்​டும். அவர்​களுக்கு பொது மன்​னிப்பு வழங்​கப்​படும். காசா​வில் இருந்து அவர்​கள் பாது​காப்​பாக வெளி​நாடு​களில் குடியேறலாம். காசாவை நிர்​வகிக்க உள்​ளூர் தலை​வர்​கள் அடங்​கிய புதிய குழு அமைக்​கப்​படும். இந்த குழு​வில் ஹமாஸ் தலை​வர்​களுக்கு இடம் கிடை​யாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்​டிஷ் முன்​னாள் பிரதமர் டோனி பிளேர் உள்​ளிட்​டோர் அடங்​கிய சர்​வ​தேச குழு​வின் வழி​காட்​டு​தலின்​படி புதிய குழு காசாவை நிர்​வகிக்​கும். காசா​வில் சிறப்பு பொருளா​தார மண்​டலம் உரு​வாக்​கப்​படும்.சர்​வ​தேச முதலீடு அதி​கரிக்​கப்​படும். வேலை​வாய்ப்​பு​கள் பெருக்​கப்​படும். ஐஎஸ்​எப் என்ற சர்​வ​தேச படை காசா​வில் பாது​காப்பு பணியை மேற்​கொள்​ளும் என்பன உள்​ளிட்ட திட்​டத்தை ட்ரம்ப் அறி​வித்​திருக்​கிறார்.

இதுதொடர்​பாக எகிப்​தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே நேற்று முன்​தினம் அமை​திப் பேச்​சு​வார்த்தை தொடங்​கியது. இஸ்​ரேல் அரசின் மூத்த அமைச்​சர் ரோன் டெர்​மர் தலை​மையி​லான குழு, ஹமாஸ் மூத்த தலை​வர் காலில் அல் ஹையா தலை​மையி​லான குழு பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இரு தரப்புக்கும் இடையே 2-வது நாளாக நேற்​றும் பேச்​சு​வார்த்தை நீடித்​தது. அமெரிக்​கா​வின் சிறப்பு தூதர் விட்​காப் மற்​றும் ஜனாதிபதி ட்ரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் இன்​றைய பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க உள்​ளனர். அப்​போது முக்​கிய உடன்​பாடு எட்​டப்​படலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையி​லான பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருக்​கிறது. ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக்​கை​தி​களை விடு​தலை செய்​து, உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை ஒப்​படைத்​து​விட்​டால் உடனடி​யாக போர் நிறுத்​த ஒப்​பந்​தம்​ கையெழுத்​தாகும்​” என்​று தெரி​வித்​தன.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்