இலங்கை வங்கி தகவல் தொழிநுட்ப தீர்வுகள் (தனியார்) கம்பனி (BOC IT Solutions (Pvt) Ltd), எனும் பெயரில் இலங்கை வங்கியுடன் முழுமையாக இணைக்கப்பட்ட நிறுவனமாக தாபிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
25.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றமடைந்து வரும் வாடிக்கையாளர் கேள்விக்கு பதிலளிப்பதற்காகவும், வங்கித் துறையில் போட்டித்தன்மையைப் பேணிச் செல்வதற்காகவும் தனது டிஜிட்டல்மயப்படுத்தல் இயலுமைகளை வலுப்படுத்த வேண்டிய தேவைகள் இலங்கை வங்கியால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனால், இலங்கை வங்கியின் தகவல் தொழிநுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் டிஜிட்டல் நிலையுரு மாற்றத்திற்கு ஒத்துழைக்கும் தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக, தகமையுடைய தகவல் தொழிநுட்ப தொழில் வல்லுநர்களுடன் கூடிய தகவல் தொழிநுட்ப நிறுவனமொன்றை இலங்கை வங்கியுடன் இணைத்து தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை வங்கியின் மனிதவலுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 1992 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டில் இயக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை வங்கியின் முகாமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பு சேவைகள் (தனியார்) கம்பனி (BOC Management and Support Services (Pvt) Ltd), இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்க, இலங்கை வங்கி தகவல் தொழிநுட்ப தீர்வுகள் (தனியார்) கம்பனி (BOC IT Solutions (Pvt) Ltd), எனும் பெயரில் இலங்கை வங்கியுடன் முழுமையாக இணைக்கப்பட்ட நிறுவனமாக தாபிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதியினால சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.